ஆந்திராவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் மீது இரட்டை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தெலங்கானாவில் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் போதுமானது. ஆனால், ஆந்திராவில் இரட்டை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவைப்படுகிறது. மதச்சார்பின்மை என்ற பெயரில் இரண்டு கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு நடத்தப்படும் இடைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பாடம் புகட்டப்படும்.
பாஜக, ஜன சேனா கூட்டணி விரைவில் வேட்பாளரை அறிவிக்கும். ஆந்திராவில் எங்கள் வெற்றி திருப்பதியிலிருந்து தொடங்கும். மாநில பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவின் வளர்ச்சிக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முந்தைய தெலுங்கு தேச கட்சியும் தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பட்டியலிட முடியுமா?" என்றார்.