மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண மோசடி வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறையின் அறிவுறுத்தலை அடுத்து என்சிபி போதைப் பொருள் தொடர்பாக வழக்குப் பதிந்து பாலிவுட்டில் பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலர் தங்கள் கலந்துகொண்ட விருந்துகளில் போதைப் பொருள்களை உபயோகித்ததாக வந்த தகவலை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவான என்சிபி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் பிரமுகர்கள் பலரை விசாரித்தும் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஷ்ரதா கபூர், சாரா அலி கான், தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்சிபி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில்,தற்போது தொலைக்காட்சி நடிகை ப்ரீதிகா சவுகானை போதைப்பொருள் வாங்கியதற்காக என்சிபியினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து இவர் கில்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரீதிகா சவுகான், சவ்தான் இந்தியா, தேவோ கே தேவ் மகாதேவ் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றியுள்ளார். என்சிபி நடத்தி வரும் இந்த நடவடிக்கையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
"நிதிஷ்குமார் ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது" - தேஜஷ்வி