ETV Bharat / bharat

பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவவிடும் பாகிஸ்தான்! - சுரங்கபாதை கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் பாகிஸ்தான், பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ விடுவது அம்பலமாகியுள்ளதாக காவல் துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

Tunnel discovered near border in Jammu and Kashmir

author img

By

Published : Nov 23, 2020, 12:36 PM IST

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20 (வெள்ளிக்கிழமை) அன்று காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் லாரியில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்டு ஜம்மு நகரை இணைக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில், நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச் சாவடி பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் லாரியிலிருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப் பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எனத் தெரியவந்தது.

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிடைத்த சில தகவல்களை பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் பகிர்ந்து கொண்டபோது பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.

என்கவுன்ட்டர் தளத்திற்கு அருகில், பாகிஸ்தான் எல்லையை கடந்து காஷ்மீர் நோக்கி ஒரு வாகனத்தில் சிலர் பயணித்ததாக அறியப்பட்டது. இதையடுத்து அருகில்தான் சுரங்கப்பாதை இருக்க வேண்டும் என்று யூகித்து, சுரங்கப்பாதையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின்பு, நேற்று (நவ. 22) ஜம்மு பிராந்தியத்தின் சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே ஒரு சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல் துறை, எல்லை காவல்படை மூத்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் சுரங்கப்பாதையை ஆய்வு செய்தனர்.

“இந்த சுரங்கம் 150 மீட்டர் நீளம் செல்கிறது. கூடுதல் விவரங்கள் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்” என்று காவல் துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.