தெலங்கானா மாநில அரசு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து கடந்த 23ஆம் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஓட்டுநர் வெங்கடையா என்பவர் ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை விரைந்துசென்று மீட்டனர்.
மேலும், இதுவரை நான்கு ஊழியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டும் சிலர் தற்கொலைக்கும் முயன்றும் உள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆளும் டிஆர்எஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இதையும் படிங்க : குடிபோதையில் செல்போன் டவர் ஏறிய இளைஞரால் பரபரப்பு!