தெலங்கானா மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது நலமல்லா வனப்பகுதி. அங்கு யுரேனிய தாதுக்கள் அதிகம் இருப்பதாகக் கூறி அணு தாதுக்கள் இயக்குநரகம் அங்கு ஆய்வு நடத்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவிடம் அனுமதி கோரியது.
இதையடுத்து தெலங்கானா முதலமைச்சர், ‘யுரேனிய சுரங்கம் வனப்பகுதியில் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், காற்று மாசுபடும். இயற்கை வளம் நிறைந்த நலமல்லா வனப்பகுதி முற்றிலும் மாசடையும்’ என்று கூறினார். மேலும், மத்திய அரசு அனுமதி கோரிய நிலையில், யுரேனிய சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் கூறுகையில், “யுரேனிய சுரங்கத்தை நலமல்லா வனப்பகுதியில் அனுமதித்தால் சுற்றுச்சுழல் மாசுபடும் என்பதால் அதற்கு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. மக்கள் அதனை நினைத்து அச்சப்பட வேண்டாம்" என்றார். மேலும் யுரேனிய சுரங்கத்தை அரசு அனுமதிக்காது என்று சட்டப்பேரவையில் அவர் தீர்மானத்தை கொண்டுவந்தார்.
சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம் குறித்து படிக்க: 'மாபெரும் காலேஸ்வரம் திட்டம்'