வெள்ளைக் காவலர் ஒருவர் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களைத் தொடர்ந்து கறுப்பு அமெரிக்கன் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்கா, உலகின் முக்கிய நகரங்களில் பெரும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
மே 25ஆம் தேதி, மினியாபோலிஸ் நகரிலுள்ள ஒரு கடைக்கு வெளியே கைதுசெய்யப்பட்ட ஃப்ளாய்ட், மினசோட்டா காவல் அலுவலர் டெரெக் சவுவின் என்பவரது காலால் அழுத்தப்பட்டு மூச்சுத் திணறலுக்கு ஆளானார். டெரெக் சவுவின் கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து அழுத்தியிருந்தார்.
அப்போது ஃப்ளாய்ட் ‘என்னால் சுவாசிக்க முடியாது’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவரின் கோரிக்கைக்கு அந்தக் காவலர் கடைசி வரைக்கும் செவிசாய்க்கவில்லை.
இறுதியாக ஃப்ளாய்ட் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அவரின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், செவ்வாயன்று ஃப்ளாய்டுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்தோர் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை, கடந்த காலப் போராட்டங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்தனர்.
அமெரிக்காவில், கடந்த சில ஆண்டுகளில், #BlackLivesMatter என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்துவருகிறது. இதற்கு முன்னர் தமீர் ரைஸ், மைக்கேல் பிரவுன், எரிக் கார்னர் ஆகியோரின் மரணங்களும் இவ்வாறு மக்கள்கூட வழிவகுத்தது. நியூயார்க் நகர் அதிகளவிலான கோவிட்-19 உயிரிழப்புகளைக் கண்டபோதிலும், ஃப்ளாய்டின் மரணம் ஒரு புதிய மக்கள் போராட்டத்தைத் தூண்டியுள்ளது.
இதுமட்டுமின்றி அங்கு 1930ஆம் ஆண்டைப் போல் பெரும் மந்தநிலை, மோசமான வேலைவாய்ப்பின்மை எனப் பொருளாதார வீழ்ச்சி நிலவுகிறது.
இந்நிலையில் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகள்) அமெரிக்காவில் வாழ்ந்த மூத்த ஊடகவியலாளரும் கட்டுரையாளருமான சீமா சிரோஹி, நமது ஈடிவி பாரத் மூத்தச் செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு காணொலி வாயிலாக அளித்த பேட்டியின்போது, அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் வேறுபட்டவை, குறிப்பிடத்தக்கவை என்று சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், “கறுப்பின சமூக மக்கள் கடந்த காலங்களில் இறந்ததற்கான தெளிவான சான்றுகள் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்.
ஆனால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் விவகாரத்தைப் பொறுத்தவரையில், காணொலி காட்சிகள் தெளிவானவை மட்டுமின்றி பார்ப்பதற்கு வேதனையானவை. இது கோபத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களின் கிட்டத்தட்ட 11 அல்லது 12ஆவது நாளாகும்.
முக்கிய அமெரிக்க நகரங்களில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருகிறது.
அப்போது சிலர் உண்மையான மாற்றங்களைக் கோரவில்லை. மாறாக, காவல் துறைக்கு ஒதுக்கப்படும் பணத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி ஜனநாயகக் கட்சியினர், பிரதிநிதிகள் ஒரு மசோதாவை வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதன் பொருள் இந்நேரத்தில் மக்கள் வீடுகளுக்குத் திரும்பப் போவதில்லை என்பதேயாகும். மேலும் இந்தப் போராட்டம் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் நடக்கிறது. அமெரிக்காவில், 40 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கணக்கிட மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
காவல் வன்முறை, இன அநீதிக்குத் தீர்வுகாண சட்டங்களை மாற்றுவதற்காகக் காவலர் சீர்த்திருத்தங்களை உறுதிசெய்வதே எதிர்ப்பாளர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாகும். சந்தேக நபர்களை மூச்சுத்திணற வைத்தல் அல்லது இனரீதியாகப் பாகுபாடு காட்டும் செயல்களிலிருந்து காவல் துறையை தடைசெய்வது போன்ற திட்டங்களையும் அவர்கள் முன்மொழிகின்றனர்.
அமெரிக்காவின் 50 மாநிலங்கள், கடைசி கிராமங்கள் வரை பல குழுக்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்; கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ராணுவத்தின் தலைமை, காவல் துறை தலைவர்கள், பாதுகாப்புச் செயலர்கள் என அனைவரின் தலைமையையும் கேள்விக்குறி ஆக்கினார்கள்.
'ஆர்ப்பாட்டத்தை தடுக்க ராணுவ துருப்புகளைப் பயன்படுத்துவேன்' என்று ட்ரம்ப் சொன்ன சொல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் நிலைமையை டொனால்ட் ட்ரம்பால் திருப்ப முடியும். அவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் குறிப்புகளிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துள்ளார்.
இந்த முழு சூழ்நிலையையும் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்தவிதம் அவருக்கு நன்மை விளைவிக்கக்கூடும். ஏனென்றால், அவர் தற்போது ஒரு சட்டம் ஒழுங்கு அதிபராக இருக்கிறார். 1968ஆம் ஆண்டில் ரிச்சர்ட் நிக்சன் அதைத்தான் செய்தார்; அதில் வென்றார். ஏனென்றால் அமெரிக்காவில் பல கறுப்பர்கள் உள்பட ஏராளமான மக்கள் காவலர்களுக்குப் பணக்குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை விரும்பவில்லை.
அவர்கள் உண்மையில் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். குற்றவாளிகளால் கொலை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இது தீவிர இடதுசாரிகளின் கோரிக்கையாகும். உண்மையில் காவல் துறையில் அதிக சீர்த்திருத்தங்கள் தேவை என்றே மக்கள் விரும்புகின்றனர்.
எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களால் நிறப் பாகுபாடு உள்ளிட்ட கவனங்களை ஈர்த்துள்ளன. 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கில அடிமை வர்த்தகர் எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் துறைமுகத்தில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க சமூகம் அமெரிக்க அரசியல் தாழ்வாரங்களில் ஒரு துடிப்பான குழுவாகும். இருப்பினும் இந்தியர்களும் கறுப்பர்கள் வாழ்வது கடினம் என்று போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கறுப்பர்களுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்தபோது அவர் வாயைத் திறக்கவில்லை; மவுனித்திருந்தார்.
ஆனால், இச்சட்டத்தால் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புக் காணப்பட்டது. காரணம், அவர் பாஜகவின் வலதுபக்கம் இருக்கிறார். மேலும் இந்திய அரசின் அழுத்தம் இருக்கும் என நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை'- இஸ்ரேல் தூதர் தகவல்!