ETV Bharat / bharat

அஹிம்சை நாயகனுக்கு மரியாதை செலுத்திய அமெரிக்க நாயகன்!

டெல்லி: ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் மரியாதை செலுத்தினார்.

Trump Pays Tribute at Rajghat
Trump Pays Tribute at Rajghat
author img

By

Published : Feb 25, 2020, 11:28 AM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்திலுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இன்று காலை, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த அதிபர் ட்ரம்ப் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அளிக்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கிருந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அஹிம்சை நாயகனுக்கு மரியாதை செலுத்திய அமெரிக்க நாயகன்

பின்னர் அங்கிருந்த பார்வையாளர் பதிவேட்டிலும் இருவரும் கையெழுத்திட்டனர். அங்கு ட்ரம்பிற்கு காந்தியின் உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது' - ட்வீட் செய்த இவாங்கா ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.