நாகாலாந்தைச் சேர்ந்த ஓட்டுநர் திலிப் கர்தா, லாரி உரிமையாளர் ஷைலேஷ் சங்கர் லால் குப்தா ஆகிய இருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஆறு லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்பட்டது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே சம்பல்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இவர்கள் மீது
- பொது இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டது -ரூ .100
- கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமை -ரூ .500
- காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை அதிகரித்தல் -ரூ. 1,000
- சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது -ரூ 5,000
- முறையற்ற அனுமதி பெறாமல் வாகனங்களை இயக்குதல் அல்லது அனுமதி நிபந்தனைகளை மீறுதல் -ரூ .5,000
- காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குதல் -ரூ .1,000
- ஒடிசா மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டப்படி சாலை வரி செலுத்தாமை -ரூ .6,53,100 என்ற ஏழு பிரிவுகளின் கீழ் அபராதத் தொகை விதித்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அபராதங்கள் பல மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.