குஜராத் மாநிலம் சூரத்தில் 23 வயதான இஸ்லாமியப் பெண் ஒருவர்,
தனது பெற்றோர், கணவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ 40,000 ரூபாய் கொடுக்கவில்லை என்பதால் அவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், தனக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் சூரத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர்.