உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகிறது.
இதனையடுத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேற்று (அக். 1) உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்றனர். அப்போது அம்மாநில காவல் துறையினர் தாக்கியதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக. 2) ஹத்ராஸில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் காவல் துறையினரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.
இதையும் படிங்க....ஹத்ராஸ் விவகாரம்: தடுப்பு காவலில் ராகுல், பிரியங்கா காந்தி