மாநிலங்களவையில் 55 இடங்களுக்கான தேர்தலில் தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், மத்தியப் பிரேதசம், ஹரியானா, சத்தீஸ்கர், அசாம், பிகார் உள்ளிட்ட 17 மாநிலங்களிலிருந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதன்படி பல மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நான்கு பேரான பெனஸிர் நூர், அர்பித்தா கோஷ், தினேஷ் திரிவேதி, சுப்ரதா பக்ஷி உள்பட இடதுசாரி, காங்கிரஸ் ஆதரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கொல்கத்தா மேயரான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் சுப்ரதா பக்ஷியை தவிர மற்ற நான்கு பேரும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். மேலும் இந்த நான்கு பேர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடித்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கோகாய்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு