ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்! - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்!

author img

By

Published : Jul 7, 2020, 9:05 PM IST

ஏழு மருத்துவ தளங்களுக்கான ஒப்புதல் சம்பந்தப்பட்ட நெறிமுறைக் குழுக்களால் இன்னும் வழங்கப்படவில்லை. சோதனைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நெறிமுறையில் முரண்பாடுகள் இருப்பதைக் கூறி, எய்ம்ஸ் மற்றும் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்டு இயங்கும் கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் நெறிமுறைக் குழுக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது.

நெறிமுறைக் குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் சோதனைகளை தொடங்க முடியாது. இந்நிலையில், கில்லூர்கர் மருத்துவமனை நெறிமுறைக் குழு (நாக்பூர்), நிறுவன நெறிமுறைக் குழு, (எய்ம்ஸ்-பாட்னா), எஸ்.ஆர்.எம். கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (தமிழ்நாடு) உள்ளிட்ட ஐந்து நெறிமுறைகள் குழுக்கள் இன்னும் மதிப்பாய்வு செய்துவருகின்றன.

இந்த ஐந்து நெறிமுறைக் குழு மொத்த வடிவமைப்பை மதிப்பீடு செய்து வருவதாக ஈடிவி பாரத்திடம் தகவல் தெரிவித்தன. நெறிமுறையில் குழந்தைக்களுக்கான மதிப்பீட்டு ஆவணம் இல்லாதது, நெறிமுறையை மேலும் தாமதப்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

ஐந்து வெவ்வேறு மருத்துவ பரிசோதனை தளங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் சோதனைக்குப் பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்தியா தனது முதல் உள்நாட்டு கரோனா தடுப்பூசியைப் பெறும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) டாக்டர் டி.ஜி. பால்ராம் பார்கவா சமீபத்தில் கூறியிருந்தார்

முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி 'கோவேக்ஸின்' மருத்துவ பரிசோதனைகளை தொடங்கினர்.

கரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை நிரூபிக்கின்றன. விஞ்ஞானிகள் எலிகள் அல்லது குரங்குகள் போன்ற விலங்குகளுக்கு தடுப்பூசியை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என்று சோதிக்கின்றனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கு கரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறும் இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் கடிதத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசியை பொது பயன்பாட்டிற்கு கொண்டுவருவது "சாத்தியமற்றது" என்று இந்திய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் பாரத் பயோடெக் இந்தியா லிமிடெட் கூட்டாக இந்த தடுப்பூசியை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.