ETV Bharat / bharat

தெலங்கானா அமைச்சர், அவரது மகன் மீது நில அபகரிப்பு வழக்கு - காவல்துறையினர் வழக்குப்பதிவு

தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது மகன் பத்ரா ரெட்டி உட்பட 5 பேர் மீது, ஒரு பெண் தனது நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

petition
petition
author img

By

Published : Dec 9, 2020, 1:35 PM IST

ஹைதராபாத்: ஒரு பெண் தனது நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டியதையடுத்து, தெலங்கானா தொழில் துறை அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது மகன் பத்ரா ரெட்டி உட்பட 5 பேர் மீது, அத்துமீறல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் அமைச்சர் மற்றும் அவரது மகனுக்கு எதிராக ஹைதராபாத் துண்டிகல் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நிலத்தை இழந்த பெண், கடந்த பிப்ரவரி மாதம் காவல் துறையிடம் புகார் மனு அளித்திருந்தார். இருப்பினும், விசாரணையின் போது, இது தவறானப் புகார் என தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து, அப்பெண்ணின் ஆலோசகர் உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

'மல்லா ரெட்டியின் மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள நிலம் எனது தாயாருக்குச் சொந்தமானது. இந்த நிலத்தை தனக்கு விற்குமாறு மிரட்டி வந்தனர். இதனிடையே அமைச்சரின் உதவியாளர்கள் 20 அடியாள்களுடன் வந்து, தனக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து ஒரு கூடாரம் அமைத்து சுவர் எழுப்பினர். இதனையடுத்து, இந்த நிலத்தை அமைச்சரின் உதவியாளர்களில் ஒருவருக்கு போலிப் பத்திரங்களை தயார் செய்து விற்றுவிட்டதாகவும், அந்த இடத்திற்குள் என்னை அனுமதிக்க மறுத்து வருகின்றனர்' எனவும் அப்பெண் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: 2 தலை, 4 கைகள்: அலிகரில் பிறந்த அதிசய குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.