ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்துக் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஓட்டிவந்த இளைஞரிடம் வாகனத்தை இயக்குவதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
ஆனால், அந்த இளைஞரிடம் வாகனத்தை இயக்குவதற்கான முறையான ஆவணங்கள் இல்லை எனத் தெரிந்துள்ளது. இதையடுத்து வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிய குற்றத்திற்காக 20 ஆயிரம் ரூபாயும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக ஐந்தாயிரம் ரூபாயும், மேலும் கூடுதலாக 500 அபராதம் என மொத்தமாக 35 ஆயிரம் ரூபாய் அபராதத்தைக் காவல் துறையினர் வசூல்செய்துள்ளனர்.
2019 மார்ச் 1ஆம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை ஒடிசா மாநில அரசு அமல்படுத்தியதையடுத்து, இந்தக் கடுமையான அபராதத் தொகையானது விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிபோதை இளைஞரிடம் டைம்பாஸ் செய்த போலீஸ்