இந்தியாவில் கோவிட் -19 தொற்று நோயால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு சார்பில் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது. அந்தவகையில், அம்மாநில போக்குவரத்து காவல் துறையின்ர் அண்ணாசாலை சிக்னல் அருகே புதுமையான முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தினர்.
போக்குவரத்து காவலர் ஜெயராம் தலைமையில் காவலர்கள் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு நின்று, 30 வினாடிகளுக்கு கைகளை கழுவும் முறை குறித்தும், கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கம் செய்து, வாகன ஓட்டிகளை கவர்ந்தனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முகக்கவசங்கள் பறிமுதல்!