புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ஏ.எப்.டி. மில் காலப்போக்கில் நிர்வாக சீர்கேடு, முறைகேடுகள் போன்ற காரணங்களால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. அதன்காரணமாக மில்லை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதனை நவீனப்படுத்தி இயக்கவேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துவந்தன.
இந்நிலையில் ஏ.எப்.டி. மில் ஆலை மூடப்படப்போவதாக, அதன் மேலாண் இயக்குனர் தொழில் துறை செயலருக்கு கடிதம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து மில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அவர்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, ஏற்கனவே இப்பிரச்னை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதில், ’ ஏ.எப்.டி மில் தொழிலாளர்களுக்கு 13 மாத நிலுவை சம்பளத்தை வழங்க துணைநிலை ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பினோம். ஆனால் மில்லை மூடினால்தான் மானியம் ஒதுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார் என அவர்களிடம் கூறிய நாராயணசாமி, மில்லை தொடர்ந்து நடத்துவதா? மூடுவதா? என்பது குறித்து எந்த முடிவையும் இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: கைதிகளுக்கு செல்போன் விற்ற 4 சிறைக் காவலர்கள் பணியிடைநீக்கம்!