ETV Bharat / bharat

ட்ரம்ப் இந்திய வருகை: வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா? - அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய வருகை மூலம் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

ட்ரம்ப் இந்திய வருகை ட்ரம்ப் இந்திய வருகை: வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா? TRADE DEAL OR NO DEAL.? U.S President Donald Trumps India visit U.S President Donald Trumps India visit U.S India TRADE DEAL அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம்
Indo - US Trade Deal
author img

By

Published : Feb 24, 2020, 9:49 AM IST

உலகின் பெரிய அண்ணனாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2 நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். ட்ரம்ப்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு மேலும் வலுப்படும் என நம்பலாம். அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி போன்ற துறைகளில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமெரிக்க அதிபரின் இந்த இந்தியப் பயணம் குறித்து பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் இப்போது நடைபெற்று வருகின்றன.

இதில், அனைவரின் கவனமும் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் எவ்வாறு இருக்கும் என்பதாகத்தான் உள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று யூகிக்கப்படுகிறது. தனது பயணத்தின்போது பேச்சுவார்த்தை சுமுகமானால், வர்த்தக உடன்பாடு கையெழுத்தாவது சாத்தியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளும் இப்போதே விரிவான அளவில் நடைபெற்றும் வருகின்றன. இதில் எஃகு, அலுமினியம் பொருட்களுக்கான உயர்ந்த பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அதற்காக பொதுவான திட்டத்தை உருவாக்கி கட்டண முறையை சீரமைக்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதே போல், விவசாயம், வாகனம், பொறியியல் துறை சார்ந்த தயாரிப்புப் பொருட்களுக்குச் சந்தையில் கூடுதல் பங்கு வழங்க வேண்டும் என இந்தியா பிடிவாதமாக உள்ளது. அதே வேளையில் அமெரிக்காவோ, தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத்துறை (ICT) பொருட்களுக்கான இறக்குமதி செலவைக் குறைக்க, பால் பொருட்கள், மருத்துவச் சாதனங்களை அதிகம் சந்தைப்படுத்த அமெரிக்கா கெடுபிடி காட்டுகிறது.

சமீபத்தில் கூட, இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுதங்கள் விற்பனை செய்யும் முடிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, அமெரிக்க அதிபரின் வருகையின் போது 186 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. மேலும் அமெரிக்காவின் லோக்ஹீத் மார்டின் நிறுவனம் மூலம் 24 பன்திறன் படைத்த எம்.எச்.60 ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் 260 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும். இதேபோல், அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரும் பாதுகாப்பு தளவாட நிறுவனமான போயிங் நிறுவனமும் இந்திய விமானப் படைக்காக தனது எப்-15 இஎக்ஸ் (F - 15EX) போர் விமானங்களை விற்கவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக போயிங் நிறுவனம், அமெரிக்க அரசிடம் ஏற்றுமதிக்கான அனுமதியையும் சமீபத்தில் கோரியுள்ளது. எனவே ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்தில் இந்த போயிங் நிறுவனத்தின் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்த முடிவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போ, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிபடுத்துவது போலவே, தற்போதைய அவருடைய இந்தியப் பயணம் அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பொரு முறை அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இந்தியாவோ இந்தப் பிரச்னை எங்கள் இரு நாடுகளிடையேயான பிரச்னை என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்த, ட்ரம்ப் அமைதியாகி விட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறையும் அதிபர் பதவிக்கு ட்ரம்ப் போட்டியிட உள்ளார். இந்தியப் பயணத்தின் மூலம் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை அள்ளவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ட்ரம்ப்பின் இந்தப் பயணத்தின்போது ஆசிய நாடுகளின் அரசியல் விவகாரங்கள் குறித்த அலசலும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இந்திய நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளில் ஒரு உண்மையான தாக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.