ETV Bharat / bharat

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சட்டத்தை ஏற்க மாட்டோம்: டி.ஆர். பாலு! - Opposition Parties protested in Parliament complex

டெல்லி: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

tr-baalu-speech-in-parliament-complex
tr-baalu-speech-in-parliament-complex
author img

By

Published : Sep 23, 2020, 9:51 PM IST

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கூறுகையில், ''இந்த மசோதாவின் படி விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒரு ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால் விவசாயிகளிடமிருந்து வாங்கிய அந்த பொருள்களை அப்போதைய ஆதார விலைக்கு விற்காமல், அடுத்த சீசனில் விற்பார்கள். இதன்மூலம் கொள்முதல் செய்பவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.

அதேபோல் ஒப்பந்தத்தாரர்கள் பயிரிடும்போதே விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட முடியும். ஒப்பந்தம் செய்தபின்னர், விவசாயிகளுக்கு வழங்கும் ஆதார விலை, விவசாயிகளிடம் சென்றுசேராது. நேரடியாக கமிஷன் ஏஜெண்ட்டிடம் சென்றுசேர்ந்துவிடும்.

இதுபோல் பல குளறுபடிகள் இந்த சட்டத்திருத்ததில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதோடு, ஏழைகளாக உள்ள விவசாயிகளை மேலும் ஏழைகளாக மாற்றும் நடவடிக்கைக்கு மத்திய அரசு கேவலமாக மசோதா நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றத்திற்காக ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டனர். அதனால் இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்டு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

வரும் 28ஆம் தேதி திமுக சார்பாக அறிவித்திருக்கும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தும்'' என்றார்.

இதையும் படிங்க: பிகார் தேர்தல்: பாஜக கூட்டணியில் பிளவு? தனித்து களமிறங்கும் பாஸ்வானின் கட்சி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.