ETV Bharat / bharat

முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படத்துடன் அபராதம்!

பனாஜி: முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுப்பதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என பனாஜி மேயர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

mayor
mayor
author img

By

Published : Nov 30, 2020, 7:44 PM IST

மத்திய அரசின் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளை அடுத்து, கோவா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த மாநில எல்லைகள் திறக்கப்பட்டன. அதனால் அங்குள்ள கடற்கரைகள், கேசினோ மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பனாஜி மேயர் மட்கைகர், “ பனாஜிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், முகக்கவசம் அணியாததோடு, அதனை அணிய அறிவுறுத்தும் அரசு பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.

எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களை புகைப்படமும் எடுக்க காவல்துறை மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்களது நோக்கம் சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்துவது அல்ல. அதேநேரம் விதிகளை பின்பற்ற மறுப்பவர்களால் ஏற்படும் கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது “ என்றார்.

இதையும் படிங்க: பாஜகவைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.