ETV Bharat / bharat

தொடர் தோல்வியில் காங்கிரஸ், அதிரடி காட்டுமா தலைமை! - காங்கிரஸ்

டெல்லி: சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியில் முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோனியா
சோனியா
author img

By

Published : Aug 23, 2020, 4:19 PM IST

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பல்வேறு சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி ஓராண்டு காலம் நிறைவுபெற்ற நிலையில், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை நடைபெறவுள்ளது. கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அதிரடி மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதில் பங்கேற்பதற்கான ஐடி, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கட்சியின் எதிர்காலம், ஏற்பட்டுள்ள பிளவு குறித்து மூத்த தலைவர்கள் கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

களத்தில் இறங்கி போராட கூடிய வகையில் ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் மூத்த தலைவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய முன்னாள் அமைச்சர்கள் அனந்த் சர்மா, கபில் சிபல், சசி தரூர், மணிஷ் திவாரி, , வீரப்ப மொய்லி, முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் ஹூடா, பிரித்திவிராஜ் சவுகான் உள்ளிட்டோர் இணைந்து கடிதத்தை எழுதியுள்ளனர்.

கட்சியின் செயற்குழுவில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்தவும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் நோக்கில் மாற்றத்தை மேற்கொள்ளவும் கடிதத்தில் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா, மாற்றத்தை கோரி கட்சியின் முக்கிய தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதனை கட்சி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி 2.55 கோடி ரூபாய்க்கு ஏலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.