குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ராணுவத்தைச் சேர்ந்த உயர் அலுவலர்களான துணை நிலை தளபதிகள் அனில் சவுகான், ராஜிவ் சிரோஹி ஆகியோர் வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டு மூத்த ராணுவ கமாண்டோக்கள் நிர்வாக அலுவலர்களைச் சந்தித்து மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டுவருகின்றனர்" என்றார். மேலும், இந்திய - மியான்மர் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று களநிலவரம் குறித்தும் ராணுவ அலுவலர்கள் ஆய்வு செய்யவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வணிகர்கள் நலனைப் பாதுகாக்க மோடி அரசு உறுதியாகவுள்ளது - ராஜ்நாத் சிங்