ETV Bharat / bharat

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு! - 25 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த குழந்தை

நொய்டா: கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 25 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தையை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்பு!

author img

By

Published : May 27, 2020, 4:15 PM IST

நொய்டாவின், கவுர் நகரப் பகுதியில் நேற்று மாலை சாலையோரத்தில் கழிவுநீர்த்தொட்டி திறந்துகிடந்தது. இதில் ஒன்றரை வயது பெண் குழந்தை விழுந்துவிட்டதாக 112 அவசர சேவைக்கு அழைப்பு வந்ததையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையைக் காவல் துறையினர் மீட்டனர்.

இது குறித்து நொய்டாவின் காவல் கூடுதல் துணை ஆணையர் ரன்விஜய் சிங், “குழந்தை விழுந்ததாக அழைப்பு வந்ததையடுத்து 12 சேவைப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்றனர்.

அங்கிருந்த பொதுமக்களின் உதவியோடு குழந்தையை மீட்டுள்ளனர். தற்போது குழந்தை பாங்கல் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவல் துறையினர் அவர்களைக் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார்.

ஒன்றரை வயது குழந்தையை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்த காவல் கூடுதல் துணை ஆணையர், அவசர உதவி சேவைப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் ஜூகேந்திர சிங், ரவிக்குமார் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: 'ஷ்ராமிக் ரயில்களை இயக்க மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்க வேண்டும்' - பியூஷ் கோயல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.