உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அறிவியல் அறிஞர்கள் முன்வந்து சந்திராயன்-2 விண்கலத்தை உருவாக்கியுள்ளனர்.
இது கடந்த ஜுலை மாதம் 15ஆம் விண்ணில் செலுத்தப்படும் என உலகமே இந்தியாவை வியந்து எதிர்பார்த்திருந்த நிலையில், வாயுக்கசிவு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் சரிசெய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சிவன் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தின் 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.