மேற்கு வங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் பணிபுரியும் ஈடிவி பாரத் செய்தியாளர் அபிஷேக் தத்தா ராய் மீது, செய்தி வெளியிட்ட காரணத்திற்காக அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவை, சோனாஷ்பூரியில் உள்ள ரெசார்டில் கரோனா காலத்தில் வெளிப்படையாக போட்டோ ஷூட் நடத்துவதாக செய்தி வெளியிட்டதற்கும், பீர்பம் மாவட்டத்தில் ஆற்றங்கரையில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக செய்தி வெளியிட்டதற்கும், காவலர் ஒருவர் மணல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது குறித்த செய்தியை வெளியிட்டதற்கும் என மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அபிஷேக் முன்கூட்டியே பிணை வேண்டி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். செய்தியாளருக்காக வழக்கறிஞர்கள் ஜெயந்த நாராயண் சட்டோபாத்யாய், நஜீர் அகமது ஆகியோர் விசாரணையில் பங்கேற்றனர்.
இதனைக் காணொலி வாயிலாக விசாரித்த நீதிமன்றம், செய்தியாளரின் குரல்வளையை நெறிப்பதற்காக இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...ராமர் கோயில் விவகாரம்: 50 ஆண்டுகால பயணத்திற்கு 40 நாள்களில் தீர்ப்பு!