ETV Bharat / bharat

ராகுல் தமிழ்நாடு வருவாரா? - தேதி கிடைக்காமல் தவிக்கும் காங்கிரஸ்!

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இம்மாதம் தமிழ்நாடு வருவார் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரின் பயணம் உறுதிசெய்யப்படாததால் தமிழ்நாடு காங்கிரஸ் தவித்துவருகிறது.

TN Congress
TN Congress
author img

By

Published : Mar 1, 2020, 2:59 PM IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு மார்ச் முதல் வாரம் வருகைதந்து பொதுக்கூட்டத்தில் பேசுவார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி நீண்ட நாள்கள் ஆகியும், ராகுல் வருகை குறித்து டெல்லி தலைமை இதுவரை தேதி ஏதும் கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி தற்போது வெளியூர் பயணத்தில் இருப்பதால் தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை என டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லித் தரப்பிடம் விசாரித்தபோது:

தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களைப் பேசுவதற்காகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி வந்திருந்தார். பிப்ரவரி 13ஆம் தேதி வரை டெல்லியிலிருந்த அவர், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், சஞ்சய் தத், முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோரை டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழகிரியால் சந்திக்க இயலவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்திப்பின்போது, தமிழ்நாட்டில் சில மாவட்ட தலைவர்கள் மாற்றம், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுவை மாற்றி அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அழகிரி விவாதித்தார்.

அப்போது, ராகுல் காந்தி தமிழ்நாடு வந்து ஓராண்டுக்கும் மேலாகவுள்ளதால், விரைவில் தமிழ்நாட்டில் அவரை வைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அழகிரி தரப்பில் விடுக்கப்பட்டது.

அப்போது மார்ச், முதல் வாரம் பார்க்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அதை நம்பித்தான், ராகுல் மார்ச் முதல் வாரம் தமிழ்நாடு வருவார் என்று சென்னை திரும்பியதும் அழகிரி பேட்டி அளித்தார். ஆனால், இதுவரை ராகுலின் தமிழ்நாடு வருகை குறித்து முடிவுசெய்யப்படவில்லை.

வெளியூர் பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாலும் இதுவரை தமிழ்நாடு கூட்டத்துக்கு தேதி வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுவை மாற்றியமைத்ததற்கு அழகிரியின் சொந்த மாவட்டமான கடலூரிலேயே காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.என். விஜயசுந்தரம் போர்க்கொடி தூக்கியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. எனினும், ராகுல் காந்தி மீண்டும் தமிழ்நாடு வர வேண்டும் என்பது காங்கிரசாரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இவ்வாறு தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரான முகேஷ் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.