புதுச்சேரி அதிமுக கூட்டணிக் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமிக்கு ஆதரவாகப் புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் இன்று நகரின் பல பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். ஆட்டுப்பட்டி பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி கிடைக்கும், ஆட்சி மாற்றம் வரும், அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ”புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமென்று சொல்பவர்களையே கைது செய்வோம் என முதல்வர் நாராயணசாமி கூறிவருவது கண்டிக்கத்தக்கது. அதிமுக நினைத்தால் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி எல்லையான கோட்டக்குப்பத்தைத் தாண்ட முடியாது,’ என்றார்.