புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதலமைச்சருக்கு அதிகாரமா? துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா? என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரன்பேடி தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இனிமேல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம்", என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, அரசு கொறடா அனந்தராமன், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் நாராயணன், எம்எல்ஏ ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.