கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த எடியூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் உடனே இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஆண்நண்பருடன் அடிக்கடி வெளியில் சுற்றியதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று அந்த பெண் ஆண் நண்பரை வெளியில் செல்ல அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.