இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று ஐநாவால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று மில்லியன் மக்களை கொன்றுகுவித்ததாகவும் ஆயிரக் கணக்கான பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் தேதி, கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) மக்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு படைகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.
-
UN International Day of Victims of Genocide on 9 Dec
— PR UN Tirumurti (@ambtstirumurti) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let’s pay homage to 3 million killed & 200,000 or more women raped in erstwhile East Pakistan by Pakistan army & religious militias in 1971 in most horrific episode in human history.
Never again @UN_GP_RtoP #PreventGenocide
">UN International Day of Victims of Genocide on 9 Dec
— PR UN Tirumurti (@ambtstirumurti) December 8, 2020
Let’s pay homage to 3 million killed & 200,000 or more women raped in erstwhile East Pakistan by Pakistan army & religious militias in 1971 in most horrific episode in human history.
Never again @UN_GP_RtoP #PreventGenocideUN International Day of Victims of Genocide on 9 Dec
— PR UN Tirumurti (@ambtstirumurti) December 8, 2020
Let’s pay homage to 3 million killed & 200,000 or more women raped in erstwhile East Pakistan by Pakistan army & religious militias in 1971 in most horrific episode in human history.
Never again @UN_GP_RtoP #PreventGenocide
இதனைத் தொடர்ந்து, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நிபந்தனை இன்றி சரணடைந்ததைத் தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு நடைபெற்ற போர் டிசம்பர் 16ஆம் தேதி முடிவுக்குவந்தது.
இதில், மூன்று மில்லியன் (30 லட்சம்) மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டி.எஸ். திருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, பாகிஸ்தான் ராணுவ வீரர்களாலும் மத பிரிவினைவாதிகளாலும் மூன்று மில்லியன் மக்கள் கொல்லப்பட்டு இரண்டு லட்சத்திற்கும் மேலான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். மனி வரலாற்றின் மிகக் கொடூரமான அத்தியாயம் அது" எனப் பதிவிட்டுள்ளார்.