ETV Bharat / bharat

மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருச்சி சிவா

டெல்லி: மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு பட்டதாரிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பேசியுள்ளார்.

tiruchy-siva-speech-on-umemployment-in-rajya-sabha

author img

By

Published : Sep 18, 2020, 9:51 PM IST

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.

அதில், ''மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளான ரயில்வே, வருமான வரி, பெட்ரோலியம் உள்ளிட்ட பணிகளில் தமிழ்நாடு பட்டதாரிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டிலிருந்து நிரப்பப்படுகிறது. அதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 84 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் மத்திய அரசின் பணிகளில் சேர்வதற்கு எஸ்எஸ்சி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்தத் தேர்வு மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து 197 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்திற்கு வரும் பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்கு தினமும் ஆன்டிஜென் பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.