ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு நோய் மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் பெண் செவிலியர்கள் சிலர், பணி நேரத்தில் டிக் டாக் செயலி மூலம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதுடன், நகைச்சுவை காட்சிகளில் இடம் பெறும் வசனங்களுக்கும் நடித்துள்ளனர். இதனை அவர்கள் இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் விசாரணைக்கு உத்திரவிட்டு சம்பந்தப்பட்ட செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பான விரிவான அறிக்கை தலைமை அலுவலர்க்கு விரைவில் சமர்பிக்கப்படும் என்று மருத்துவமனை பொறுப்பு அலுவலர் தபன் குமார் தின்டா தெரிவித்துள்ளார்.