ETV Bharat / bharat

இந்த ரணகளத்திலேயும் டிக்-டாக்- பெண் கைது!

மும்பை: ஊரடங்கை உத்தரவை மீறி பொது இடத்தில் டிக்-டாக் செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

tiktak video in curfew
tiktak video in curfew
author img

By

Published : Mar 28, 2020, 11:15 AM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டும், பலர் அத்துமீறி வெளியே வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வெளியே சுற்றும் நபர்களை பிடித்து, அவர்களுக்கு தோப்புக்கரணம், தவளை நடை போன்று நூதன முறையில் விழிப்புணர்வு தண்டனைகளை காவல்துறையினர் வழங்கிவந்தனர். இருப்பினும், ஊரடங்கு உத்தரவை அத்துமீறும் சம்பவங்கள் தொடர் கதையாகிவருகின்றன.

இந்தநிலையில், நூதனமுறையில் தண்டனை அளித்துவந்த காவல்துறையினர் அடுத்தக்கட்டமாக வெளியே வாகனங்களில் ஊர்சுற்றும் நபர்கள் மீது சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தகவல்தொடர்புத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 48 வயதான ரெஹானா ஃபெரோஸ் கான் என்ற பெண் ஊரடங்கு உத்தரவையும் மீறி, பொது இடத்தில் ஆண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபடியே, டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளது, தற்போது வைரலாகிவருகிறது.

டிக்-டாக் செய்த பெண் கைது!

அந்த வீடியோவில், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும், எனக்கு காவல்துறையினர் மீது எவ்வித பயமும் இல்லை என்றுக்கூறி, அந்தப்பெண் வெளியிட்ட டிக்-டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி, பொது இடத்தில் டிக்-டாக் வீடியோ பதிவிட்டதால், ஆர்.சி.எஃப் காவல்துறையினர் தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தினக்கூலிகளுக்கு உணவளித்த நபருக்கு கத்திக்குத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.