கொரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவிட்-19 வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.
இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுக்க ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் நான்காயிரம் பேரும், இத்தாலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் பாதிப்பு 83 ஆகவும், உயிரிழப்பு இரண்டாகவும் அறியப்படுகிறது. அனைத்து மாநில சுகாதாரத்துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 17 ஆயிரத்து 500 பேர் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கைதிகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் அங்கு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் விதமாக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கிருமிநாசினி, முகவுறை, கையுறை கட்டாயம் - கொரோனாவைத் தடுக்க மத்திய அரசு முடிவு!