உத்தரப் பிரதேச மாநிலத்தின் மலா காட்டுப் பகுதியில் அமைந்திருப்பது பிலிபிட் புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் புலிகள் தாக்கி உயிர்கள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், அப்பகுதிக்குச் சென்ற 28 வயது இளைஞர் ஒருவரைப் புலி கொன்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து உடலைக் கைப்பற்றிய வனத்துறை அலுவலர்கள், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.