திவால் சட்டம்:
திவாலா நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) குறித்து, 2016ஆம் ஆண்டு 28ஆம் தேதி மார்ச் அன்று ஒரு சட்டத்தில் கையெழுத்திடப்பட்டது. அந்தாண்டு டிசம்பர் முதல் இது செயல்பாட்டுக்கு வந்தது. இந்திய திவால் நிலை மற்றும் திவால் வாரியம் (ஐபிபிஐ) அக்டோபர் 1, 2016 அன்று நிறுவப்பட்டது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் வழங்குநர்கள் தங்கள் கடன்களின் அதிகப்பட்ச பகுதியை, விரைவாக மீட்டெடுக்க உதவும் ஒரு சட்டத்தின் தேவையை உணர்ந்ததால், ஐபிசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் பல்வேறு நலன்களை நேர்த்தியாக சமப்படுத்த முயற்சிக்கிறது. ஒரு வணிகத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் வாங்குவது இயல்பானது.
பணி மற்றும் சவால்கள்:
வளர்ந்து வரும் எந்தவொரு பொருளாதாரத்திற்கும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி தேவை. வணிகங்கள் வளர்ந்து செழித்து வளரும்போது அது வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அரசாங்கத்திற்கான வருவாய் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இதன் மூலம் ஒரு பெரிய நேர்மறையான சுழற்சி தொடங்குவதற்கு வழிவகுக்கிறது.
எந்தவொரு வர்த்தகம் அல்லது வணிகச் செயலுக்கும் இரண்டு முக்கிய அம்சங்களை வெற்றிகரமாக மற்றும் திறமையாக முடிக்க வேண்டும். வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் ஒரு வணிகத்தில் நுழைதல், வெளியேறுதல். ஒருவேளை கடனை தரமுடியவில்லையென்றால் பணத்தை மீட்டெடுப்பதற்கான செயல்முறையில் இறங்குவார்கள் சிலர். இந்தியப் பொருளாதாரத்தில் மூலதனக் குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம், உலகின் நன்கு வளர்ந்த பொருளாதாரங்களைப் போல், நம்மிடம் பலதரப்பட்ட பெரிய பத்திர சந்தை இல்லை.
சிக்கல்கள்:
மீட்பு வீதம் மிகக் குறைவாக இருப்பதாகவும், சட்டத்தில் உள்ள 270 நாட்களின் காலக்கெடுவை அது கடைப்பிடிக்க முடியவில்லை என்பதும் ஐபிசியின் முக்கிய விமர்சனங்கள். எடுக்கப்பட்ட சராசரி நேரம் 300 நாட்கள் முதல் 374 நாட்கள் வரை மாறுபடும்.
அவ்வப்போது இதைவிட அதிக நேரம் கூட எடுக்கும். வரக்கூடிய அளவு பற்றிய கேள்வி எப்போதும் சர்ச்சையின் மூலமாகும். ஐபிசி விஷயத்தில், மீட்பு விகிதம் சுமார் 10 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை மீட்கப்படாத மதிப்பில் மாறுபடும்.
1) சந்தை மதிப்பு என்பது சொத்துகளுக்கான திறந்தவெளி சந்தையில் செல்லும் வீதமாகும். இது பெரும்பாலும் சொத்துகளுக்கான மிக உயர்ந்த மதிப்பீடாகும். இது செயற்கையாக உயர்ந்ததாகவும் பெரும்பாலும் சந்தை மதிப்புக்கு மேலாகவும் இருக்கலாம்.
2) செயல்பாட்டு கடனாளிகள் மற்றும் கடன் வழங்குநர்களின் குழு தொடர்பான ஆரம்பச் சிக்கல்கள்.
3) பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுபவர்கள், செயல்பாட்டு கடன் வழங்குநர்களா?
4) கடனளிப்பவர்களின் பிரிவு மற்றும் பணப்புழக்கத்தின் பங்கு ஆகியவை வெவ்வேறு பிரிவு கடன் வழங்குநர்களை நடத்தும் முறையோடு தொடர்கின்றன.
இதையும் படிங்க: அதெல்லாம் இல்ல! - இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது!