கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிராசுரு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் நள்ளிரவு இரண்டு மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வீடு இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அந்த குடும்பத்தினரை மீட்டனர். இதில் இரப்பா ஹதபாத் (60), மனைவி கௌரம்மா (53), அவர்களது மகன் நிங்கப்பா (32) மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நிங்கப்பாவின் மனைவியும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பின்பு, சம்பவ இடத்திற்கு பாகல்கோட் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் லோகேஷ் ஜகலசர், அப்பகுதி எம்எல்ஏ வீரண்ண சரந்திமத் ஆகியோர் வந்தனர். மேலும், இறந்த குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்குவதாக சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழைக்கு 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்!