ETV Bharat / bharat

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - 3 மருத்துவர்கள் கைது - தற்கொலை

மும்பை: மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் மூன்று பெண் மருத்துவர்களை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

3மருத்துவர்கள் கைது
author img

By

Published : May 29, 2019, 2:43 PM IST

மும்பையில் மருத்துவக்கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி பாயல் தத்வி. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவரை மூத்த மருத்துவர்கள் ராகிங் செய்தும், சாதி பெயரை சொல்லியும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி மே 22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவியை ராகிங் செய்த மூன்று பெண் மருத்துவர்களும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

suicide-case
மாணவி பாயல் தத்வி

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் தேடிவந்த நிலையில், ஹேமா அஹூஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

மும்பையில் மருத்துவக்கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி பாயல் தத்வி. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவரை மூத்த மருத்துவர்கள் ராகிங் செய்தும், சாதி பெயரை சொல்லியும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி மே 22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவியை ராகிங் செய்த மூன்று பெண் மருத்துவர்களும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

suicide-case
மாணவி பாயல் தத்வி

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் தேடிவந்த நிலையில், ஹேமா அஹூஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Intro:ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது


Body:சென்னை, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், நாலாயிரத்து ஒரு பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்காலிகமாக பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்றுள்ளார் பட்டியல் பதவி உயர்வு அளிக்க வேண்டிய எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. எனவே ஆசிரியர்களிடம் பட்டியலை காண்பித்து அதில் சேர்க்கை மற்றும் நீக்கம் இருந்தால் செய்ய வேண்டும். முறையான விதிகளின்படி கல்வி தகுதியினை பெறாத ஆசிரியர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்தால் அவர்களையும் நீக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முதுகலை ஆசிரியராக பணி புரிய வேண்டும். அவர்கள் மீண்டும் பட்டதாரி ஆசிரியராக பணிக்குத் திரும்பிய பின்னர் ஓர் ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்பதை திட்டவட்டமாக கூற வேண்டும். மேலும் கடந்த காலங்களில் பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும் பல்வேறு காரணங்களால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயர் பதவி உயர்வு பெயர் பட்டியல் பரிந்துரைக்காமல் மறைத்து வந்துள்ளது புகார்களில் தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற புகார்கள் எழாத வண்ணம் மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி இருந்தும் முன்னுரிமை பட்டியலில் பெயர் அனுப்பாத சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இளங்கலை படத்தில் இரட்டை படிப்பு படித்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்கள் மீதும் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருப்பின் அந்த ஆசிரியர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய ஏதுவாக அது குறித்த விபரங்களை நேரில் அளிக்க வேண்டும். மேலும் பதவி உயர்வு வழங்கப்பட்ட பின்னர் அதில் குறை ஏதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலக எழுத்தர் கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் . தமிழ் 690, ஆங்கிலம்( ஒரேபாடம்) 455,ஆங்கிலம் (வெவ்வேறு பாடம்)297, கணக்கு 715 ,இயற்பியல் 576, விலங்கியல் 258, வணிகவியல், பொருளியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களில் 4001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது என அதில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விதி 17 பி ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படும் மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.