உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்த சிவம் (18), கோவிந்த் (16) மற்றும் அமன் (23) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் எட்டாவாவில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சிவில் லைன்ஸ் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இளைஞர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், மூவரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து, எட்டாவா மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், ஓம் வீர் சிங் கூறியதாவது, "சடலங்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. பேருந்து ஓட்டுநரை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் உலா வரும் கொள்ளை கும்பல்; அடுத்தடுத்து 750கி நகைக் கொள்ளை!