நேபாளத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏராளமானோர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று காரணமாக, நாடு முழுவதும் நான்காவது முறையாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்து குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த பேருந்துகள் மூலம் புறப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய - நேபாள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு ஏற்பாடு செய்து, ஆதரவு அளித்துள்ளது.
நேபாளம் திரும்பியதும் 14 நாட்கள் அவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக தொழிலாளர்கள் கூறியும்; நேபாள அரசு அவர்களை திரும்பப் பெறுவதற்கு தயக்கம் காட்டிவருகிறது. அந்நாட்டில் இருந்து அனுமதி வராதது, அவர்களுக்கு வேதனை அளித்துள்ளது. இதனால் நேபாளத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 357 பேர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.