ETV Bharat / bharat

அஸ்ஸாம் வெள்ளம்: நீரில் மூழ்கிய கிராமங்கள்

கவுஹாத்தி: பிரம்மபுத்திரா, தங்னி ஆறுகளில் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அஸ்ஸாம் மாநிலத்தின் கிழக்கு மாகாணமான தரங்கில் பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அசாம் வெள்ளம்: நீரில் மூழ்கிய கிரமங்கள்
அசாம் வெள்ளம்: நீரில் மூழ்கிய கிரமங்கள்
author img

By

Published : Jul 24, 2020, 8:52 AM IST

அஸ்ஸாமில் பெய்துவரும் தொடர்கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் சாக்தோலா ஆற்றில் அபாய அளவு கடந்து பாயும் வெள்ள நீர் மேற்கு மாகாணமான தரங்கில் உள்ள மங்கல்தே மற்றும் சிபாஜர் விதான் சபா பகுதிகளின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

சோனித்பூர், போர்சோலா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிய ஒருவர், "கடந்த ஏழு நாள்களாக எனது வீடு நீரில் மூழ்கியுள்ளது, இருப்பினும் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. உணவுக்கே வழியில்லாமல், பட்டினி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

"கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த எங்களை, வெள்ள நீர் மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எங்கள் உணவுப் பொருள்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டன. சணல் பயிர் முற்றிலுமாக அழிந்துவிட்டது. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை அரசு தரப்பில் எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை" என்று மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறினார்.

அஸ்ஸாமில், 56 லட்சத்து 27 ஆயிரத்து 389 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 89 பேர் உயிரிழந்தனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.