கடந்த மார்ச் மாதம் டெல்லியில் சமய மாநாடு ஒன்று நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிய அளவிலான மாநாடுகளை தவிர்க்கும் படி மக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாடு முடிந்து அந்தந்த மாநிலத்துக்கு சென்றவர்களால் கரோனா பாதிப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரம் வெளிநாட்டவர் பத்தாண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.