திருமணம் என்றாலே நம்மில் பலருக்கும் நினைக்கு வருவது எப்படி எல்லாம் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவது என்பதுதான். திருமண அழைப்பிதழ்கள் தொடங்கி, ஆடைகள், ஆபரணங்கள், உணவு, மேடை அலங்காரம் என ஒவ்வொன்றையும் ஆடம்பரமாக செய்வோம்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் வசித்து வரும் அமோத் ஸ்ரீவஸ்தா குடும்பத்தினர் தனது மகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் பசுமையை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில் புதிய முறையைக் கையாண்டுள்ளார்.
இதில் முக்கியமாக தனது மகனின் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை பிரிண்ட் அடிக்காமல், அமோத் ஸ்ரீவஸ்தா குடும்பத்தினர் தங்கள் கைகளாலேயே எழுதப்பட்ட திருமண அழைதப்பிதழை ஒரு கவரில் வைத்து அதனுடன், ஆறு மரக்கன்றுகளுக்கான விதைகளையும் சேர்த்து வைத்து அனுப்பிவருகின்றனர். அந்த விதைகள் அனைத்தும் பழங்கள், மரங்களின் விதைகளாகும்.
இது குறித்து அமோத் ஸ்ரீவஸ்தா கூறுகையில், ”தன்னுடைய மகன் ஆகாஷ் திருமணம் ஜீன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்தின் மூலம் தாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்காக ஒரு சிறிய முயற்சியை எடுத்துள்ளோம். அதாவது திருமண அழைப்பிழை கைகளாலேயே எழுதி, அதில் ஆறு விதைகளை சேர்த்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துள்ளோம். இதுவரை 350 அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளோம். இன்னும் நிறைய விதைகளை நிச்சயமாக திருமண அழைப்பிதழுடன் அனுப்பவுள்ளோம்
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும். இதுதான் நமது எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சிறந்த பரிசு” என்றார்.