ETV Bharat / bharat

வேளாண் துறையை வேற லெவலுக்கு கொண்டுசெல்லும் பிக்செல் ஸ்பேஸ்!

பெங்களூரு: செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் வேளாண் சார்ந்த சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெங்களூருவைத் தளமாகக் கொண்ட விண்வெளி-தொழில்நுட்ப நிறுவனமான பிக்செல் ஸ்பேஸ் இயங்கிவருகிறது.

வேளாண் துறையை வேற லெவலிற்கு கொண்டுசெல்லும் பிக்செல் ஸ்பேஸ்!

author img

By

Published : Dec 13, 2020, 6:58 AM IST

காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக நீண்ட வறட்சி, அடிக்கடி வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை உலகம் அனுபவித்துவருகிறது. இந்த முக்கியமான தருணத்தில், பெங்களூருவைத் தளமாகக் கொண்ட விண்வெளி-தொழில்நுட்ப தொடக்க பிக்செல் ஸ்பேஸ் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் சில சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க திட்டமிட்டுள்ளது.

பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவர்கள் அவாய்ஸ் மற்றும் க்ஷிதிஜ் கண்டேல்வால் ஆகிய இருவரால் 2019ஆம் ஆண்டில் பிக்செல் ஸ்பேஸ் தொடங்கப்பட்டது. இது 24 மணி நேரமும் நானோ செயற்கைக்கோள்களின் உதவியுடன் பூமியில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் புகைப்படம் எடுத்துவருகிறது.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) உடனான ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரோவின் வசதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அணுக சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் சில நிறுவனங்களில் பிக்செல் ஸ்பேஸ் ஒன்றாகும். இது தனது முதல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் பிப்ரவரி 2021 ஆண்டு விண்ணில் செலுத்துகிறது.

பிக்செல் நிறுவனரும், அதன் தலைமை நிர்வாக அலுவலருமான அவாய்ஸ் அகமது

பிக்செல் நிறுவனரும், அதன் தலைமை நிர்வாக அலுவலருமான அவாய்ஸ் அகமது, அவர்களின் கனவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஈடிவி பாரத்துடன் பேசினார். அப்போது, "பூமியில் எங்கும் எந்த நேரத்திலும் உயர்தர படத்தை எடுக்க 32 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப பிக்செல் ஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது. எங்களின், முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை பிப்ரவரி 2021 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுகணை வழியாக அனுப்ப திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 2021-க்குள், எங்கள் இரண்டாவது செயற்கைக்கோளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்.

2022ஆம் ஆண்டில் எங்களது 32 நானோ செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவரும். அடிப்படையில், வேளாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு, காலநிலை மற்றும் வனவியல் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் அதிக திறன்களைக் கொண்ட சிறந்த கண்காணிப்புப் படக்கருவிகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண் துறையில் நாங்கள் முதன்மை கவனம் செலுத்துகிறோம். மண்ணின் தன்மை பயிர் ஆரோக்கியம், ஊட்டச்சத்து குறைபாடு, நீர்ப்பாசனத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணிப்போம்.

படங்களைப் பெற்ற பிறகு, அதை எங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) மாதிரிகள் மூலம் செயலாக்குவோம். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் உதவியுடன், பயிர்களில் நோய்கள், பூச்சிக்கொல்லி தொற்று, பற்றாக்குறை நீர்ப்பாசனம் ஆகியவற்றை 6-24 மணி நேரத்திற்குள் தெரிந்துகொள்ளலாம். வேளாண்மை, சுரங்கத் துறை அமைச்சகம், வேளாண் தொடர்பான நிறுவனங்களான விதை நிறுவனங்கள், உர நிறுவனங்கள், டிராக்டர் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விவசாயத்தைத் தவிர, மாசு கண்காணிப்பு, நீர்நிலைகளின் நிலை பகுப்பாய்வு, எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வு, நகர்ப்புற கண்காணிப்பு உள்ளிட்ட பலவற்றில் நாங்கள் பணியாற்றுகிறோம். நாங்கள் வானிலை மாதிரி கணிப்புகளிலும், வெள்ளம் மற்றும் காட்டுத் தீயின் தாக்கத்தையும் பகுப்பாய்வு செய்கிறோம்.

2017-18 ஆம் ஆண்டின் பொருளாதார நிலை அறிக்கையின்படி, 'காலநிலை மாற்றம் காரணமாக, விவசாய ஆண்டு வருமானம் 15% முதல் 18% வரையிலும், நீர்ப்பாசனம் கிடைக்காத பகுதிகளுக்கு 20% முதல் 25% வரையிலும் குறைய வாய்ப்புள்ளது' எனத் தெரிகிறது.

இந்த முக்கியமான கட்டத்தில் இந்தியா இஸ்ரோவின் வளங்களை தனியார்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா போன்ற வளரும் நாட்டில், விண்வெளி ஆய்வு என்பது பெரும்பாலும் ஒரு மோசமான செலவினமாகக் காணப்படுகிறது. விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக இந்தாண்டு மே மாதம் நாசா இரண்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது.

அதேபோல், கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியின்போது, ​​ விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மத்திய அரசு உறுதிசெய்தது. விண்வெளித் திட்டங்களுக்குத் தேவையான மானியம் வழங்க ஏதுவாக மாற்று வருவாய் ஆதாரத்திற்கான முயற்சியில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூற முடியாது.

ஆயினும்கூட, இது காலதாமதமான நடவடிக்கை என்றும், விண்வெளித் துறைக்கு இது 1991 தருணம் என்றும் பல்வேறு நிறுவனங்கள் கருதுகின்றன. விண்வெளித் திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன, இந்தச் செயல்திட்டத்தில் வெற்றிபெற 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாதிக்க வயது தடை இல்லை என்பதற்கு அல்கா ஒரு முன் உதாரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.