ETV Bharat / bharat

'மகாராஷ்ட்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதலமைச்சராகும் காலம் விரைவில்...!'

author img

By

Published : Oct 9, 2019, 8:54 AM IST

மும்பை: மகாராஷ்ட்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆகும் காலம் விரைவில் வரும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

sanjay raut

மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா அருகே தசாரா பண்டிகையையொட்டி சிவசேனா கட்சி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டு அக்கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவுத் பேசினார். அப்போது அவர், இன்று சிவசேனா அமைதியாக இருக்கிறது, அதற்காக அப்படியே இருந்துவிட முடியாது என்றார்.

தாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் சில பிரச்னைகளில் கவனமாக குரல் எழுப்பிவருவதாக சுட்டிக்காட்டிய அவர், வரும் காலங்களில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆவார் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று மட்டும் எண்ணவில்லை என்று சொன்ன சஞ்சய் ராவுத், அமைச்சரவையில் சிவசேனாவின் கொடியை நாட்ட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது யாரும் அதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை என்றார். ஆனால் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, பணமதிப்பு நடவடிக்கையால்தான் பொருளாதாரம் சரிவடைந்தது என்று தைரியமாகக் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிச் சட்டம் 370ஐ நீக்க வேண்டும் என்பதே சிவேசனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவின் எண்ணமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், அதன்காரணமாகவே அதேபோன்ற எண்ணம் கொண்ட பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் என்றார்.

இறுதியாக அவர் பேசுகையில், ராமர் கோயில் கட்டப்படும்போது வைக்கப்படும் முதல் செங்கலில் சிவசேனாவின் பெயர் இடம்பெறும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில பாஜக-சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் மீண்டும் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சராக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத் இவ்வாறு பேசியிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.