புதுச்சேரியில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி விநியோகத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ் வாஸ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப 15 கிலோ, 30 கிலோ எடையுள்ள இலவச அரிசி பைகள் வழங்கப்பட்டுவருகின்றன. தற்போது, மக்களுக்கு வழங்கத் தேவையான அரசி இந்திய அரசின் உணவுக் கழத்தின் கிடங்கில் இருப்பு உள்ளது.
ஊரடங்கின் காரணமாக, அரிசகளை அளவு பிரித்து, பாலித்தீன் பைகளில் அடைத்து வாகனங்களின் மூலம் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை.
இந்த செயல்முறைக்கு ஐந்து கோடி ரூபாய் அரசு மதிப்பிட்டிருந்த நிலையில், ஊழியர்களின் ஊதியம் உள்பட தற்போதுவரை மூன்று கோடியே 50 லட்ச ரூபாய்தான் செலவாகியுள்ளது. இலவச அரிசி விநியோகத்தில் அரசு வெளிப்படையாகவே செயல்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க:மஞ்சள் குடும்ப அட்டைக்குப் புதுச்சேரியில் 10 கிலோ அரிசி!