ETV Bharat / bharat

'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை' - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - டெல்லி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
author img

By

Published : Dec 14, 2020, 4:18 PM IST

டெல்லி: வேளாண் துறையில் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு இடமில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், "கிழக்கு லடாக்கின் எல்லை கோட்டுப் பகுதியில், சீன ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவ வீரர்கள் மிகுந்த துணிவுடன் செயல்பட்டுள்ளனர்.

சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவத்தின் செயலை எண்ணி வருங்கால சமுதாயத்தினர் மிகுந்த பெருமை கொள்வர். சவாலான சூழலைப் பாராட்டத்தக்க வகையில், வலிமையுடனும், தைரியத்துடனும் நமது எல்லை வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இது உலகம் மாறி வருவதையும், எவ்வாறு இரு நாடுகளுக்கிடையேயான உடன்பாடுகள் பெரும் சவாலாக இருக்கிறது என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது" என்றார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் தொடர்பாக பேசிய அவர், " நமது நாட்டின் தாய் துறையாக வேளாண் துறை அமைந்துள்ளது. இந்த துறையில் எடுக்கப்பட்டுள்ள முற்போக்கு நடவடிக்கைகளை திரும்ப பெறும் கேள்விக்கே இடமில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு சமூக தீர்வு காண மத்திய அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது.

கரோனா பரவல் காரணமாக அதிக பாதிப்பை சந்திக்காத துறையாக வேளாண் துறை உள்ளது. இந்த பெருந்தொற்று பரவலால், நாட்டின் உணவு உற்பத்திக்கு தடை எதுவும் ஏற்படவில்லை. தேவையான அளவு உணவுப்பொருட்கள் கிடங்குகளில் கையிருப்பில் உள்ளன" என்றார்.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் பிடியில் விவசாயிகள் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.