ETV Bharat / bharat

ம.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க திக்விஜய சிங் இறுதி முயற்சி - Digvijay singh

பெங்களூரு: மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சமரசம் செய்யும் முயற்சியில் திக்விஜய சிங் களமிறங்கியுள்ளார்.

Digvijaya Singh
Digvijaya Singh
author img

By

Published : Mar 18, 2020, 8:51 AM IST

Updated : Mar 18, 2020, 10:35 AM IST

மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நீடிப்பதில் தற்போது சிக்கல் நிலவிவருகிறது. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து அங்கு சிந்தியா ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா கடிதத்தை அவைத்தலைவர் என்.பி. பிரஜாபதிக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்த அங்கு காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துவிட்டது எனக் கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு பாஜக கடிதம் எழுதியது. கரோனா பாதிப்பின் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது மேற்கொள்ள இயலாது என அவைத்தலைவர் தெரிவிக்க, விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது பாஜக.

இது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க அரசு இறுதிகட்ட முயற்சியில் களமிறங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் சென்ற மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங், அங்கு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்திக்க முற்பட்டார்.

தர்ணாவில் ஈடுபடும் திக்விஜய சிங்

அவரைக் காவல் துறையினர் அனுமதிக்காததால், அங்கு தரையில் அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்தார் திக்விஜய சிங். இதையடுத்து அவரைக் கர்நாடக மாநில காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைக்காகக் கைதுசெய்தனர். சம்பவத்தின்போது திக்விஜய சிங்குடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாரும் உடனிருந்தார்.

இதையும் படிங்க: இரண்டே நாளில் பங்குச்சந்தை சரிவால் 9.74 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்!

Last Updated : Mar 18, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.