ETV Bharat / bharat

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை?

அமெரிக்காவில் மலேரியாவின் தாக்கம் குறைவு. எனவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் இருப்பை அந்நாடு வைத்திருக்கவில்லை. அமெரிக்காவிற்குத் தேவைப்படும் மருந்துகளின் பட்டியலில் இந்த மருந்து 128ஆவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் நோயாளிகளின் உடலில் இந்த மருந்து பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

HCQ
HCQ
author img

By

Published : Apr 21, 2020, 9:14 AM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர். மலேரியாவுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து இந்நோய்க்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், உலக நாடுகள் தங்களின் கவனத்தை இதன் மீது திருப்பியுள்ளன.

அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகள் இந்த மருந்தை கேட்டு இந்தியாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா ஏன் அதிகம் தயாரிக்கிறது? எந்தளவுக்கு இந்த மருந்து கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துகிறது? இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் போதுமான அளவு உள்ளதா? நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வேறெந்த நாட்டிலாவது இந்த மருந்து கொடுக்கப்படுகிறதா? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

உலகையே பெருந்தொற்று உலுக்கிவரும் நிலையில், இந்தியாவின் உதவியை நாடி பல நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 1918ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய ஸ்பானிஷ் காய்ச்சலால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 1928ஆம் ஆண்டு முதல் மலேரியா நோய் பரவத் தொடங்கியது.

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தென் அமெரிக்காவில் உள்ள சின்சோனா அஃபிசினாலிஸ் என்ற மருந்தின் பட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பட்டையிலிருந்துதான் குயினின் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது.

1930-களில், மலேரியா நோய் பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது. அப்போது இந்த மருந்து பெரிய அளவில் தயாரிக்கப்பட்டது. பின்னர், இந்த மருந்துக்கு குளோரோகுயின் எனப் பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.

இதனை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 1950ஆம் ஆண்டு, இந்த மருந்தை மாற்றத்திற்கு உட்படுத்தி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மலேரியா, ஆர்த்தரைட்டிஸ் (மூட்டு வீக்கம்) போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும்வகையில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மலேரியாவின் தாக்கம் வளர்ந்த நாடுகளில் குறைந்த காரணத்தால் 1980-களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தயாரிப்பை அந்நாடுகள் நிறுத்திக்கொண்டன. இந்த மருந்தின் விலை குறைவாக இருந்த காரணத்தால், தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே லாபத்தை ஈட்டின.

இதன்மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இறக்குமதியை நம்பியே இருந்தன. மலேரியாவின் தாக்கம் வளரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளிலும் அதிகமாக இருந்தது. கிராமப் பகுதிகள் அதிகம் இருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிகளவில் தயாரித்ததுவருகின்றன. உலகளவில் 70 விழுக்காடு ஏற்றுமதியை இந்தியா மேற்கொள்கிறது. ஆனால், மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்களை சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. மாதத்திற்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஓராண்டுக்கு 2.4 கோடி மாத்திரைகள் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. அதனால் நாட்டில் நான்கு மடங்கு அதிக அளவில் மருந்துகளைத் தயாரிக்கிறோம்.

அமெரிக்காவில் மலேரியாவின் தாக்கம் குறைவு. எனவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் இருப்பை அந்நாடு வைத்திருக்கவில்லை. அமெரிக்காவிற்குத் தேவைப்படும் மருந்துகளின் பட்டியலில் இந்த மருந்து 128ஆவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் நோயாளிகளின் உடலில் இந்த மருந்து பல்வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்தை உட்கொள்ளும் 100இல் ஒரு நோயாளிக்கு இருதயம், சிறுநீரகம் சார்ந்த பிரச்னை ஏற்படுகிறது.

15 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேலான முதியவர்களுக்கும் இந்த மருந்து வழங்கப்படக் கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த மருந்து சிறப்பான முறையில் செயல்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்கு இந்த மருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரப்படுகிறது. தொலைநோக்கு நடவடிக்கையாக, 70 லட்சம் நோயாளிகளுக்கு கொடுக்கும் வகையில் 10 கோடி மருந்துகள் அதிகமாகத் தயாரிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது, விசா குறித்த பிரச்னைகள் ஆலோசிக்கப்படுகிறது - அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.