ETV Bharat / bharat

அரசுத் தரப்பில் 180 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி - மின் துறை அலுவலர்கள் தகவல்

author img

By

Published : Jan 7, 2020, 10:23 PM IST

புதுச்சேரி: அரசுத் தரப்பில் 180 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும், 90 கோடி ரூபாய் அளவில் தனியார் நிறுவனங்கள் பாக்கி வைத்திருப்பதாகவும் புதுச்சேரி மின் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The puducheri government has a due of power bill of 180 crores
The puducheri government has a due of power bill of 180 crores

புதுச்சேரி கூட்டுறவுத் துறை வளாகத்தில் இன்று மின் துறை தொடர்பான மக்கள் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய மின் துறை இணை ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கோயல் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். புதுச்சேரி மின் துறையின் உயர் அலுவலர் முரளி, துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஒருவர், வெறும் 500 ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டு மின் இணைப்பைத் துண்டிக்கும் மின்துறை, ஏன் பல லட்ச ரூபாய் மின் பாக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் மின் இணைப்பைத் துண்டிக்க முன்வருவதில்லை என்று கோயலிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் தற்போது அரசுத் துறை வைத்துள்ள மின் பாக்கி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

மின் துறை தொடர்பான மக்கள் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

அதற்குப் பதிலளித்த மின் துறை உயர் அலுவலர் முரளி, அரசுத் தரப்பில் 180 கோடி ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் தரப்பில் 90 கோடி ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் மாதமாதம் மின்கட்டண ரசீது வழங்கும் வகையில் புதிய செயலி ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையில் டிரான்ஸ்ஃபார்மரைப் பிடித்து ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Intro:புதுச்சேரி அரசு தரப்பில் 180 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்திருப்பதாகவும் 90 கோடி ரூபாய் அளவில் தனியார் நிறுவனங்கள் பாக்கி வைத்திருப்பதாகவும் புதுச்சேரி மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Body:புதுச்சேரி கூட்டுறவு துறை வளாகத்தில் இன்று நடைபெற்ற மின் துறை தொடர்பான மக்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மத்திய மின்துறை இணை ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கோயல் தலைமை தாங்கினார் இந்த கூட்டத்தில் புதுச்சேரி மின் துறையின் உயரதிகாரி முரளி மற்றும் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்போது பேசிய பொதுமக்களில் ஓருவர் வெரும் 500 ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பவர்களின் வீடு மின் இணைப்பைத் துண்டிக்கும் மின்துறை ஏன் பல லட்ச ரூபாய் மின் பாக்கி வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்களின் மின் இணைப்பை துண்டிக்க முன்வருவதில்லை என்று ஆணையத் தலைவர் கோயலிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் மேலும் தற்போது அரசுத்துறை வைத்துள்ள மின் பாக்கி எவ்வளவு என கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது இதற்கு பதிலளித்த மீன்துறை உயர் அதிகாரி முரளி பேசும்போது அரசு தரப்பில் 180 கோடி மின் பாக்கி வைத்திருப்பதாகவும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் 90 கோடி ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பதாகவும் பதிலளித்தார் மேலும் மாதமாதம் மின்கட்டண ரசீது வழங்கும் வகையில் புதிய ஆப் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் மீன்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அப்போது அக்கூட்டத்தில் தெரிவித்தனர்

பேட்டி பொதுமக்கள் பாலா

Conclusion:புதுச்சேரி அரசு தரப்பில் 180 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்திருப்பதாகவும் 90 கோடி ரூபாய் அளவில் தனியார் நிறுவனங்கள் பாக்கி வைத்திருப்பதாகவும் புதுச்சேரி மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.