உலக அளவில் உலக வளர்ச்சிக்கான ஆய்வில், இந்திய பொருளாதாரத்தின் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வேகமாக பொருளாதாரம் வளர்ந்துவரும் நாடுகளில் பட்டியலில் இந்திய பிரதான இடத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மின்னணு வர்த்தகத்தில் நேரடி முதலீட்டிற்கான அரசு வழிகாட்டுதல்கள், உள்நாட்டு பயனாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
அரசு மாற்றியமைத்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி,
மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.
தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தங்களின் வலைதளங்களில் விற்கக்கூடாது.
ஒரு நிறுவனத்தின் தளத்தில், ஒரே விற்பனையாளர் 25 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களை விற்க முடியாது.
விற்பனையாளர்களிடம், பொருட்களை தங்களின் தளத்தில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் ஆக விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
அனைத்து விற்பனையாளர்களுக்கும் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், எல்லா சேவைகளையும் வழங்கவேண்டும்.
ரொக்கத்தை திரும்ப அளிக்கும் திட்டம், கேஷ்பேக் திட்டம் போன்றவை ஒளிவு மறைவின்றி, நியாயமான வகையில் இருக்க வேண்டும்.
அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைப் பின்பற்றியது தொடர்பாக மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)-யிடம் செப்டம்பர் 30-ம் தேதி சட்டபூர்வமான ஆடிட்டரின் அறிக்கையுடன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிகள் அனைத்தும் மின்னணு வர்த்தகத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வணிகர்களின் நலனைப் பாதுக்காக்க உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்குவது கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.